இண்டியன் வெல்ஸ் வெற்றி இரட்டையர்

அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் நடந்த பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில், செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா - கேதரினா சினியகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் பிரேசிலின் ஹடாட் மயா - லாரா சீஜ்மண்ட் (ஜெர்மனி) ஜோடியுடன் மோதிய செக். இணை 6-1, 6-7 (3-7), 10-7 என்ற செட் கணக்கில் 1 மணி, 57 நிமிடம் போராடி வென்றது. கோப்பையுடன் கிரெஜ்சிகோவா, சினியகோவா.

ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் நெதர்லாந்தின் வெஸ்லி கூல்ஹாப் - நியால் ஸ்குப்ஸ்கி (இங்கிலாந்து) ஜோடியுடன் மோதிய இந்தியாவின் ரோகன் போபண்ணா - ஆஸ்திரேலியா எப்டன் (ஆஸி.) ஜோடி 6-3, 2-6, 10-8 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 24 நிமிடத்துக்கு நீடித்தது. இண்டியன் வெல்ஸ் கோப்பையுடன் எப்டன், போபண்ணா.

Related Stories: