மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் அண்ணா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்: அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடிவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம், “பாரம்பரிய மருத்துவ தொழில்நுட்பம்” என்கின்ற புதிய மையத்தை நிறுவியுள்ளது. இம்மையம் மருத்துவ தொழிற்சாலைகள், பாரம்பரிய மருத்துவ அமைப்புகள் மற்றும் நமது சமூகத்திற்கு நன்மைகளை வழங்கும். இந்த புதிய மையம் அறிவியல் வளர்ச்சிக்காக பல்துறை ஆராய்ச்சிகளை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்துவதற்கான அறிவியல் அடிப்படையிலான ஆதாரங்களை வெளிப்படுத்துவதில் இந்த மையம் கவனம் செலுத்த உள்ளது.

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (‘சி.சி.ஆர்.எஸ்) இணைந்து இம்மையம் செயல்படத் தொடங்கியுள்ளது. ஆயுஷ் அமைச்சகம் இந்தியாவில் சித்த மருத்துவ ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கின்றது. இத்திட்டத்தின் கீழ் 9 நிறுவனங்கள்/அலகுகள் (தமிழகத்தில் மூன்று, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, புது டெல்லி, ஆந்திரப்பிரதேசம் மற்றும் கோவாவில் தலா 1) செயல்பட்டு வருகின்றன. இந்த அலகுகள் பொது மக்களின் தேவைகளை மருத்துவம் மற்றும் இலக்கிய ஆராய்ச்சி எதிர்கொள்கின்றது. மேலும், சி.சி.ஆர்.எஸ் தொடர்ந்து பொதுமக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்கி வருகிறது.

அறிவியல் ஆராய்ச்சிகளை மேம்படுத்தவும், அனுபவ அடிப்படையிலான மருத்துவத்தை ஆதார அடிப்படையிலான மருந்துகளாக மாற்றவும் ரிவர்ஸ் பார்மகாலஜி மூலம் சி.சி.ஆர்.எஸ் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் மற்றும் பேராசிரியர் மீனா குமாரி, தலைமை இயக்குனர் (கூடுதல் பொறுப்பு), ‘சி.சி.ஆர்.எஸ்’ முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

Related Stories: