மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார் நகைச்சுவை நடிகர் வடிவேலு

மதுரை: தமிழ்நாடு முதலமைச்சரின் 70 வருட வாழ்க்கை வரலாறை தற்போதைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் விதமாக தமிழ்நாடு முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படக்கண்காட்சி கடந்த வரம் சென்னையில் தொடங்கியது. இதனை அடுத்து மதுரையில் இன்று காலை தொடங்கப்பட்டது. மதுரையில் இருந்து நத்தம் செல்ல கூடிய சாலையில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் இன்று காலை அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார்.

இதனை தொடர்ந்து பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த புகைபட கண்காட்சிக்கு வருகை தந்து பார்வையிட்டனர். இந்நிலையில், திரைப்பட மதுரையை சேர்ந்த நடிகர் வடிவேலு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். முதல்வரின் 2 வயது முதல் தற்போது வரையுள்ள அனைத்து புகைப்படங்களையும் பார்த்து வியப்படைந்தார். இதில் முன்னாள், இன்னாள் அரசியல் தலைவர்கள், மற்றும் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

Related Stories: