கோவை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை கோவை வந்தார். விமான நிலையத்தில் கொங்கு மண்டல செயலாளர் உபைதுர் ரஹ்மான் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாநில கொள்கை பரப்பு செயலாளர் செங்குளம் சி.கணேசன், மாவட்ட செயலாளர்கள் முத்துப்பாண்டி நேருஜி ராமகிருஷ்ணன் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆலடி ஆனந்த், வேல்மயில், மாவட்ட துணைச் செயலாளர் செல்வபுரம் சேகர், கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் ரவிச்சந்திரன், சரத் சக்தி கொங்கு மண்டல தலைமை நிலைய செயலாளர் பால்ராஜ் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் ரவிச்சந்திரன்கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஐகோர்ட் துரை, குனியமுத்தூர் ஆறுமுகம், ரத்தினபுரி செல்வகுமார், சரத்ராஜா, தம்பு, வக்கீல் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.