வீட்டு வசதி வாரிய வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பு

சென்னை:  வீட்டு வசதி வாரிய அமைச்சராக கடந்த 2008ம் ஆண்டில் இருந்த ஐ.பெரியசாமி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை காவலர் கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இந்த புகார் தொடர்பாக  ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த  2012ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு, சென்னை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் வழக்கறிஞர்கள் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் ஐ.பெரியசாமி  மீது, வழக்கு தொடரஅனுமதியை பேரவை தலைவர் கொடுத்ததில் விதிமுறை பின்பற்றப்படவில்லை. ஆவணங்களையும் ஆய்வு செய்துதான் அவர் வழக்கு தொடர அனுமதி அளித்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. குற்றசாட்டுகளை நிரூபிக்க ஆதாரங்களை அரசு தரப்பு கொடுக்கவில்லை. தமிழ்நாடு அரசு விதிகளுக்கு உட்பட்டே வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், இதில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே, மனுதாரர் மீதான வழக்கை  தொடர தேவையில்லை. எனவே, மனுதாரர் ஐ.பெரியசாமி மட்டும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று தீர்ப்பளித்தார்.

Related Stories: