நீதிபதிகள் நியமனத்திற்கான கொலீஜியம் முறை சிறப்பானது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பெருமிதம்

புதுடெல்லி: நீதிபதிகள் நியமனத்திற்காக தற்போது உருவாக்கப்பட்டுள்ள  கொலீஜியம் முறையே சிறந்தது என்று உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் கலந்து கொண்டு பேசியதாவது:  ஒவ்வொரு அமைப்பும் சிறப்பானது அல்ல ஆனால் நீதிபதிகள் நியமனத்துக்காக நாம் உருவாக்கிய கொலீஜியம் முறையானது மிக சிறந்த அமைப்பாகும்.

ஆனால் இதன் நோக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த  நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதாகும். நீதித்துறை சுதந்திரமாக இருக்க வேண்டுமானால் வெளிப்புற தாக்கங்களில் இருந்து அதனை பாதுகாக்க வேண்டும். வழக்குகளை தீர்ப்பது என்பதில் அரசாங்கத்திடம் இருந்து எந்த அழுத்தமும் இல்லை. நீதித்துறை மீது எந்த அழுத்தமும் இல்லை என்பதற்கு தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு ஒரு சான்றாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: