நாகர்கோவில்: தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு நேற்று கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர்அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் காவலர் பற்றாக்குறை என்பது மிக, மிக குறைவு. கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரம் சப் இன்ஸ்பெக்டர்களை பணியில் சேர்த்து உள்ளோம். 444 சப் இன்ஸ்பெக்டர் தேர்வு செய்துள்ளோம். அவர்கள் 1ம் தேதி முதல் பயிற்சியை ஆரம்பித்து விட்டார்கள். பயிற்சி முடிந்து அவர்களும் பணிக்கு வந்து விடுவார்கள். அதுபோல் பத்தாயிரம் காவலர்கள் நியமிக்கும் திட்டம் உள்ளது. இதில் முதற்கட்டமாக 3500 காவலர்கள் தேர்வு செய்வதற்கான பணி நடைபெற்று வருகிறது.