ராகுலை பேசவிடாமல் தடுப்பது நாகரிகமற்றது: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: கொடுங்கையூர் முத்தமிழ்நகரில் உள்ள தனியார் பள்ளியில், காங்கிரஸ் தலைவர்களான காமராசர், கக்கன் ஆகியோரது சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.  இதில் கே.எஸ்.அழகிரி காமராசர் சிலையை திறந்து வைத்து பேசியதாவது: காமராசர் தனது வாழ்க்கையில், அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு வழங்க இந்திய அரசியல் சட்டத்தை திருத்துவதற்காக, அப்போதைய பிரதமர் நேருவிடம் கோரிக்கை வைத்தார்.

அதேபோல் கக்கனும் அமைச்சர்களில் சிறந்து விளங்கினார். நாடாளுமன்றத்தில், ராகுல்காந்தியை பேச விடாமல் தடுப்பது நாகரிகமற்றது. இதுவரை யாரும் ராகுலை நாடாளுமன்றத்தில் பேசவிடாமல் தடுத்தது இல்லை. ஆனால், பாஜ அரசு அதனை செய்து வருகிறது. எந்த தவறும் செய்யாத ராகுல்காந்தி ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்.

Related Stories: