மே 5ம் தேதி வணிகர் உரிமை முழக்க மாநாடு விக்கிரமராஜா தலைமையில் ஆலோசனை

சென்னை: மே 5ம் தேதி நடைபெறவுள்ள வணிகர் தின மாநாடு குறித்து விக்கிரமராஜா தலைமையில் சென்னை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர்  சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் 40வது வணிகர் தின மாநில மாநாடு வணிகர்  உரிமை முழக்க மாநாடாக வரும் மே 5ம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ளது. தமிழகம்  முழுவதும் இருந்து பல லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து  கொள்கிறார்கள். இதுதொடர்பான சென்னை மண்டல ஆலோசனை கூட்டம், மாநிலத்  தலைவர் விக்கிரமராஜா தலைமையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட  நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மாநாடு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும், நிதி ஆதாரங்கள், செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாநாட்டுக்கு வருகை தருபவர்களுக்கு உணவு, தங்கும் விடுதிகள், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனை கூட்டத்தில் விக்கிரமராஜா பேசுகையில், ‘‘தமிழகத்திலேயே இந்த மாநாடு இதுவரை இல்லாத அளவில் அதிகப்படியான வணிகர்களை அழைத்து வரவுள்ளனர்.   இந்த மாநாடு வணிகர்களை பாதுகாக்கும் மாநாடாக அமையும் என்ற நம்பிக்கை வணிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது,’’ என்றார்.

Related Stories: