கோடை காலத்தில் மின் தேவை அதிகரித்தாலும் மின்வெட்டு பிரச்னை ஏற்படாது: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: கோடை காலத்தில் மின் தேவை அதிகரித்தாலும் அதனை சமாளிக்க மின்வாரியம் தயாராக உள்ளதாகவும், மின்வெட்டு பிரச்னை ஏற்படாது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 17,196 மெகாவாட்டாக இருந்த மின் தேவை இந்தாண்டு மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 18,053 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதம் 18,500 மெகாவாட்டாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடை காலத்தில் மின் தேவை அதிகரித்தாலும் அதனை சமாளிக்க மின்சார வாரியம் தயார் நிலையில் உள்ளது.

மேலும், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிக்கான டெண்டர் விரைவில் கோரப்பட உள்ளது. ஸ்மார்ட் மீட்டர்கள் இலவசமாக நுகர்வோர்களுக்கு வழங்கப்படும், அதிநவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட உள்ளதால் மின் இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை. தமிழகத்தில் மின்சார வாகனத்திற்கான சார்ஜிங்க் நிலையம் முதற்கட்டமாக மின்சாரத்துறைக்கு சொந்தமான 100 இடங்களில் அமைக்கப்பட உள்ளது. அதற்காக இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது, ஏப்ரல் இறுதிக்குள் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: