சென்னை: டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் ஹீரோவாக நடிக்க உள்ளார். நட்புன்னா என்னான்னு தெரியுமா, ஆகாஷ்வாணி, லிஃப்ட் படங்களில் நடித்தவர் கவின். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான டாடா படம் வெற்றி பெற்றது. இதையடுத்து கவினுக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. அடுத்ததாக ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் பல படங்களுக்கு நடனம் அமைத்த டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன், இந்த படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.