அமித்ஷா அழைப்பின் பேரில் புதுவை அமைச்சர் நமச்சிவாயம் இன்று திடீர் டெல்லி பயணம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங். - பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வருகிறது. அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில்  புதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு தொகுதியிலும் போட்டியிட பாஜ ஆர்வம்காட்டி வருகிறது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அமைப்பின் பேரில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜக தலைவர் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் இன்று அதிகாலை 3 மணியளவில் அவசரமாக புதுவையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றனர்.

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசவுள்ளனர். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் புதுச்சேரி எம்பி தொகுதியில் பாஜக வேட்பாளராக யாரை நிறுத்தினால் வெற்றி பெறலாம் என ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: