பெரும்பாக்கம் எழில் நகரில் புதிதாக கட்டப்பட்ட தொடக்கப்பள்ளி: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

வேளச்சேரி: பெரும்பாக்கம், எழில் நகரில்  உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை  பூமிகா  அறக்கட்டளையினர் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 16 வகுப்பறைகள், நூலகம், கணிணி அறை, ஆய்வகம், தலைமை ஆசிரியர் அறை, தளவாடப் பொருட்கள் இருப்பு அறை, மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக கழிவறைகள், 25   டேபிள்கள்   மற்றும் நாற்காலிகள், 40 இணை டேபிள் மற்றும் நாற்காலிகள், 75 மின்விசிறிகள்,  100 மின்விளக்குகள், குடிநீர் வசதி, திறந்த நிலை கலையரங்கம் ஆகிய அனைத்து வசதிகளுடன் கட்டிக் கொடுத்துள்ளனர்.

இந்த பள்ளி திறப்பு விழா நேற்று  மாலை பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தலைமை வகித்தார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு புதிய பள்ளியை  திறந்து வைத்தனர். முடிவில் சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் நன்றி கூறினார்.

Related Stories: