வங்கிகள் மூடல் எதிரொலி அமெரிக்க நீதித்துறை விசாரணை தொடக்கம்

வாஷிங்டன்: அமெரிக்க  வங்கிகள் மூடப்படும் பிரச்னை குறித்து நீதித்துறை விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில  நாட்களுக்கு முன் மிகவும் பழமையான ‘சிலிக்கான் வேலி’ வங்கி மூடப்பட்டது.  அதற்கு அடுத்த சில நாட்களில் ‘சிக்னேச்சர்’ வங்கி மூடப்பட்டது. தற்போது  ‘பர்ஸ்ட் ரிபப்ளிக்’ வங்கியும் மூடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மொத்தம் 6 அமெரிக்க வங்கிகள் நெருக்கடியில்  சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சிலிக்கான் வேலி வங்கியின் சரிவு குறித்து நீதித்துறை மற்றும் பத்திரங்கள் பரிவர்த்தனை ஆணையம் (எஸ்இசி) ஆகியவை விசாரணையை தொடங்கி உள்ளன. இதற்கான விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன.  முதற்கட்டமாக வங்கியின் மூத்த நிர்வாகிகளின் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: