10ம் வகுப்பு தேர்வு மாணவர்களுக்கு பெங்களூருவில் சிறப்பு உதவி மையம் திறப்பு

பெங்களூரு: பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மாநில கல்வி இயக்குனரகம் சார்பில் சிறப்பு உதவி மையம் திறக்கப்படுகிறது. இது குறித்து கர்நாடக மாநில உயர்நிலை பள்ளி தேர்வு வாரிய இயக்குனர் எச்.என்.கோபாலகிருஷ்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கல்வி இயக்குனரகம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ஆலோசனை மற்றும் உதவி மையம் வரும் 20ம் தேதி முதல் திறக்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் 080-23310075 மற்றும் 080-23310076 ஆகிய எண்களில் தினமும் பகல் 3 மணி முதல் மாலை 7.30 மணி வரை வரும் 28ம் தேதி வரை தொடர்பு கொண்டு பேசலாம். மேலும் வரும் 26ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை உதவி மையம் செயல்படும்.

மேலும் வரும் 31ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை தேர்வு நடக்கும் நாட்களில் மட்டும் உதவி மையம் இயங்கும். மாணவ, மாணவிகள் தங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேட்டு பெற்று கொள்ளலாம். இடையில் வரும் 22ம் தேதி உகாதி பண்டிகை நாளில் மட்டுமே உதவி மையம் இயங்காது. கல்வி இயக்குனரம் ஏற்படுத்தியுள்ள வசதியை மாணவ, மாணவிகள் மட்டுமில்லாமல், அவசியம் ஏற்படும் பட்சத்தில் பெற்றோர்களும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

Related Stories: