சென்னையில் மணலி, இராயபுரம், வளசரவாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி உள்ளிட்ட 19 இடங்களில் சாலைப் பணிகள் தீவிரம்.!

சென்னை: சென்னை மாநகராட்சி, மணலி, இராயபுரம், வளசரவாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட 19 இடங்களில் நேற்று இரவு சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பெருநகர சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.55.61 கோடி மதிப்பீட்டில் 78.29 கிலோ மீட்டர் நீளத்தில் 452 சாலைகள்,  நகர்ப்புர உட்கட்டமைப்பு சேமிப்பு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.29.71 கோடி மதிப்பீட்டில் 51.37 கிலோ மீட்டர் நீளத்தில் 300 சாலைகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு  திட்டத்தின் கீழ்  ரூ.39.39  கோடி மதிப்பீட்டில் 75.16 கிலோ மீட்டர் நீளத்தில் 405 சாலைகள் என மொத்தம் ரூ.124.71 கோடி  மதிப்பீட்டில்  204.82 கிலோ மீட்டர் நீளத்தில் பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச்சாலைகள் உட்பட 1,157 சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், நகர்ப்புர சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.151 கோடி மதிப்பீட்டில் 221.88 கிலோ மீட்டர் நீளத்தில் 1,408 சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை கண்காணிக்க முதன்மைச் செயலாளர்/ ஆணையாளர் அவர்களின் தலைமையில் அலுவலர்கள், பொறியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, இக்குழுவினரால் பழைய சாலையினை முழுவதுமாக அகழ்ந்தெடுத்தல், சாலையின் அளவு, தார்க்கலவையின் தரம் போன்ற சாலைப் பணிகள் மேற்கொள்ளும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதாக என கண்காணிக்கப்பட்டு சாலைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் நேற்று இரவு மணலி மண்டலத்தில் வார்டு-16க்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, 16 அடி சாலை, 4வது லேன் மற்றும் வார்டு-22க்குட்பட்ட தேவராஜன் குறுக்குத் தெரு ஆகிய 2 இடங்களிலும், இராயபுரம் மண்டலத்தில் வார்டு-49க்குட்பட்ட குருவப்பா சாலையிலும், வளசரவாக்கம் மண்டலத்தில் வார்டு-153க்குட்பட்ட கணேஷ் அவென்யூ-1வது பிரதான சாலையிலும், அடையாறு மண்டலத்தில் வார்டு-171க்குட்பட்ட தெற்கு கேசவப் பெருமாள்புரம், வார்டு-177க்குட்பட்ட வி.ஜி.பி. செல்வா நகர் விரிவு-3வது பிரதான சாலை (பகுதி), அண்ணாநகர் 3வது குறுக்குத் தெரு, பேபி நகர் முதல் குறுக்குத் தெரு (பகுதி), வார்டு-180க்குட்பட்ட திருவீதியம்மன் கோயில் 4வது தெரு, வார்டு-168க்குட்பட்ட அம்பாள் நகர் பிரதான சாலை ஆகிய 6 இடங்களிலும், பெருங்குடி மண்டலத்தில் சர்ச் சாலை, பேச்சியப்பன் 4வது தெரு, 5வது தெரு, 6வது தெரு, ஐ.ஐ.டி. காலனி முதல் தெரு, 2வது பிரதான சாலை, 3வது பிரதான சாலை, திருவள்ளூர் நகர்-எம்.ஜி.ஆர். தெரு, சங்கம் காலனி-2வது தெரு விரிவு ஆகிய 9 இடங்கள் என மொத்தம் 19 இடங்களில் பழைய சாலைகளை முழுவதுமாக அகழ்ந்தெடுத்தல், Wet Mix Macadam, பி.வி.சி. குழாய் பொருத்துதல், தார்க்கலவை, கான்கிரீட் கலவை போடுதல் மற்றும் வெட்டப்பட்ட சாலையினை மறுசீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related Stories: