சிவசேனா கட்சியை ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தது தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு..!

டெல்லி: சிவசேனா கட்சியை ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தது தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 34 எம்எல்ஏக்கள் அப்போது முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பினார்கள். இதனால் அப்போதைய கவர்னர் கோஷியாரி  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து உத்தவ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டே நியமிக்கப்பட்டார்.

இந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு மஹாராஷ்டிரா ஆளுநர் கோஷியாரி உடந்தையாக இருந்ததாகவும், ஏக்நாத் ஷிண்டே என்ற தனி நபரை பெருமபான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது தவறு என்றும் உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதீமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் உத்தவ் தாக்கரே - ஏக்நாத் ஷிண்டே இடையிலான சிவசேனா கட்சி வழக்கில் விசாரணை நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: