சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு: சொன்னதைச் செய்வது மட்டுமல்ல; சொல்லாமலும் செய்வோம். செய்கிறோம்! தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. ஆனால் Golden Hours காலக்கட்டத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக்கூடாதென, கடந்த 18-12-2021 அன்று இன்னுயிர் காப்போம் திட்டத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் தொடங்கி வைத்தேன்.