லண்டன் கருத்தரங்கில் இந்தியாவுக்கு எதிராகவோ, அவமதிக்கும் வகையிலோ நான் எதுவும் பேசவில்லை: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: லண்டன் கருத்தரங்கில் இந்தியாவுக்கு எதிராகவோ, இந்தியாவை அவமதிக்கும் வகையிலோ நான் எதுவும் பேசவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். என்னை பேச அனுமதித்தால் நாடாளுமன்றத்தில் இது குறித்து உரிய பதிலளிப்பேன் எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார் . லண்டனில் இந்தியாவை அவமதித்து பேசியதாக ராகுல் காந்திக்கு எதிராக பாஜகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்திய ஜனநாயகம் குறித்து கவலை தெரிவித்து பேசியதற்காக ராகுல்காந்தி மன்னிப்பு கோரவேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.  சர்ச்சை பேச்சு என பாஜகவினர் குற்றம்சாட்டி வரும் நிலையில் ANIக்கு ராகுல்காந்தி விளக்கம் அளித்திருக்கிறார்.

அப்போது,  நான் இந்தியாவுக்கு எதிரான பேச்சு எதுவும் பேசவில்லை என்றார்.  அன்னிய மண்ணில் தேசத்தை அவமதித்ததாக பாஜகவின் குற்றச்சாட்டிற்கு பதிலளிப்பீர்களா? என்ற கேள்விக்கு, அவர்கள் என்னை அனுமதித்தால் நான் சபைக்குள் பேசுவேன் என்றார். இந்திய ஜனநாயகம் அழுத்தம் மற்றும் தாக்குதலுக்கு உள்ளானது என்பது அனைவருக்கும் தெரியும், செய்திகளில் அதிகம் வந்துள்ளது. நான் இந்தியாவில் ஒரு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறேன்.

ஜனநாயகம் என்பது பாராளுமன்றம், சுதந்திரமான பத்திரிகை மற்றும் நீதித்துறை, அணிதிரட்டல் மற்றும் அனைத்தையும் சுற்றி நகர்த்துவது என்ற எண்ணம் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பின் மீதான தாக்குதலை நாங்கள் எதிர்கொள்கிறோம் என தெரிவித்தார். இதனிடையே பரபரப்பான அரசியல் சூழலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளார்.

Related Stories: