2 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக இருந்த இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் பொறுப்பிற்கு எரிக் கார்செட்டி தேர்வு

வாஷிங்டன் : கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக இருந்த இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் பொறுப்பிற்கு எரிக் கார்செட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கான தூதரக இருந்த கென் ஜஸ்டர், அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது, ராஜினாமா செய்தார். இதனால் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் இருந்து அந்த பொறுப்பு காலியாக இருந்தது. அதே ஆண்டு ஜூலையில் லாஸ் ஏஞ்செல்ஸ் முன்னாள் மேயரான எரிக் கார்செட்டியை இந்தியாவிற்கான அமெரிக்க தூதரக அமைச்சர் ஜோபிடன் பரிந்துரை செய்தார்.

ஆனால் பல்வேறு காரணங்களால் அவருடைய பெயர் நிராகரிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜனவரியில் மீண்டும் பிடன் பரிந்துரை செய்த நிலையில், அதற்கான வாக்கெடுப்பு செனட் சபையில் தற்போது நடத்தப்பட்டது. எதிராக 42 வாக்குகளும் ஆதரவாக 52 வாக்குகள் கிடைத்த நிலையில், எரிக் கார்செட்டியை  இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக நியமிக்க செனட் சபை ஒப்புதல் அளித்தது. 

Related Stories: