திராவிட கட்சிகள் ஆட்சியில்தான் வளர்ச்சி தமிழ்நாட்டுக்கு இணையாக வேறு எந்த மாநிலமும் இல்லை: பாஜ குற்றச்சாட்டுக்கு கே.பி.முனுசாமி பதிலடி

கிருஷ்ணகிரி: ‘திராவிட கட்சிகள் ஆட்சியில் வளர்ச்சியடைந்து உள்ளன. தமிழ்நாட்டுக்கு இணையாக வேறு எந்த மாநிலமும் இல்லை’ என்று பாஜ குற்றசாட்டுக்கு கே.பி.முனுசாமி பதிலடி அளித்து உள்ளார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்தியில் பா.ஜ.,வோடு கூட்டணி தர்மம் என்ற வகையில், அவர்களை நாங்கள் விமர்சிக்கவில்லை.

அனைவரும் ஒன்றிணைந்து, இணக்கமாக ஒரே குறிக்கோளோடு இந்தியாவை உயர்நிலைக்கு கொண்டு செல்லும் வழியில், பிரதமராக மோடியை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழகத்தில் பா.ஜ., ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என விரும்புவது தவறு இல்லை. ஆனால், திராவிட கட்சிகள் ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை என குற்றம்சாட்டுவது தவறு. கடந்த 10 ஆண்டுகளில் வேளாண்மை, கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, உள்ளிட்ட துறைகளில் சிறந்த மாநில விருதுகளை பெற்றது தமிழகம். இந்திய நாட்டில் வளர்ச்சி பாதையில் தமிழகத்திற்கு இணையாக வேறு எந்த மாநிலமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: