சென்னை: பிரதான குழாயை இணைக்கும் பணி நடைபெற உள்ளதால் அம்பத்தூர், அண்ணாநகர் உள்ளிட்ட 7 பகுதிகளுக்கு 18ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராமாபுரம் விரிவான குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ், குறிஞ்சி நகர் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியின் 700 மில்லி மீட்டர் விட்டமுள்ள உந்து குழாயுடன் மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் உள்ள 1500 மில்லி மீட்டர் விட்டமுள்ள பிரதான குழாயை இணைக்கும் பணிகள் நடக்க இருக்கிறது.
