ரூ. 100 கோடி தருவதாக கேரள தொழிலதிபரிடம் மோசடி ஊராட்சி தலைவர் வீடு, பெட்ரோல் பங்க்கில் சோதனை

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஆண்டிகுளத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50). பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்றத்தலைவர். இவரது தொழில் நண்பர்களான சென்னையை சேர்ந்த ராமலட்சுமி மற்றும் ஜெயசீலன் ஆகிய 3 பேரும், கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் உமரிடம் சூப்பர் மார்க்கெட் வைப்பதற்கு ரூ. 100 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. பன்னீர்செல்வம் மீது கடன் வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி கமிஷன் தொகை மட்டும் பலகோடி ரூபாய் மோசடி செய்ததாக 22க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.  

இதுதொடர்பாக தொழிலதிபர் உமர், சென்னை மத்திய குற்றவியல் போலீசில் புகார் அளித்தார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து பன்னீர்செல்வத்தை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு ெதாடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் ஜான் விக்டர் தலைமையில் 20 போலீசார் நேற்று காலை 8 மணியளவில் ஆலங்குடி ஆண்டிகுளம் வந்தனர். பின்னர் அவர்கள் தலா 6 பேர் குழுக்களாக பிரிந்து ஆலங்குடி அரசு மருத்துவமனை எதிர்புறம் உள்ள பன்னீர்செல்வம் அலுவலகம், அவரது வீடு, அதேபோல ஆண்டிகுளத்தில் உள்ள மற்றொரு வீடு, 2 பெட்ரோல் பங்குகள் என 5 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இரவு 7 மணி வரை நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

Related Stories: