10ம் வகுப்பு தனித்தேர்வர் ஹால்டிக்கெட்டை 17ம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

சென்னை: அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று ஹால் டிக்கெட்என்ற வாசகத்தினை கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்திலுள்ள “எஸ்.எஸ்.எல்.சி பப்ளிக் எக்ஸாமினேசன் ஏப்ரல் 2023 - ஹால் டிக்கெட் டவுன்லோட்” என்ற வாசகத்தினை கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண், நிரந்தரப் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் மார்ச் 20ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை, அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளன. செய்முறைத்தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் செய்முறை பயிற்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: