100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடப்பது மிக முக்கிய பிரச்சனையாக பார்க்க வேண்டியுள்ளது: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடப்பது மிக முக்கிய பிரச்சனையாக பார்க்க வேண்டியுள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மோகன் என்பவர் 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி செய்த ஊராட்சி ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில்; தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா நல்லூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை நடைபெற்று வருகிறது. நல்லூர் ஊராட்சியில் பல்வேறு திட்டங்களுக்காக ஊராட்சி நிதியை செலவு செய்ததாகவும், செயலர் மற்றும் அலுவலர்கள் முறைகேடாக கணக்கு காண்பித்துள்ளார். ஆனால் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் எந்த வித பணிகளும் நடைபெறவில்லை. போலியான ரசீது மற்றும் புகைப்படங்களை தயாரித்து பதிவேற்றம் செய்து பஞ்சாயத்து நிதியை முறைகேடாக பயன்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே ஊராட்சி நிதியை முறைகேடாக பயன்படுத்திய ஊராட்சி மன்ற செயலர் மாற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியம், விக்ட்டோரிய அமர்வு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் முறைகேடுகள் நடப்பது மிக முக்கிய பிரச்சனையாக பார்க்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டு இந்த வழக்கு தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சிய, ஊராட்சி மன்ற செயலர் பதில் மனு தக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.

Related Stories: