ஐதராபாத்: ஆஸ்கர் விழாவில் பங்கேற்று ஐதராபாத் திரும்பிய ஜூனியர் என்டிஆரை ரசிகர்கள் சூழ்ந்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில், ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடித்த ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தனது மனைவி லக்ஷ்மி பிரணதியுடன் சென்ற ஜூனியர் என்டிஆர், நேற்றிரவு ஐதராபாத் விமான நிலையம் வந்து சேர்ந்தார். அவரை காண்பதற்காக விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். மேலும், அவர் விமான நிலையத்தில் இருந்து காருக்குள் ஏறிய போது பத்திரிகை, ஊடகங்களால் சூழப்பட்டார். ரசிகர்களும் அவரது காரை சூழ்ந்து கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.