ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் தமிழ்நாடு முதல்வர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் திமுக சார்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை வகித்தார். ஸ்ரீபெரும்புதூர் பேரூர் செயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார். அவைத்தலைவர் கோகனன், ஒன்றியக்குழு தலைவர் கருணாநிதி, மாவட்ட கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பால்ராஜ், ஒன்றிய நிர்வாகிகள் சுபரஞ்சனி கன்னியப்பன், பரமசிவன், நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
