சென்னை அருகே குன்றத்தூரில் ரூ.1 கோடியில் 'ஐடியா லேப்'திறப்பு: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தலைவர் சீதாராம் பேட்டி

சென்னை: இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பொறியியல் படிப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் தலைவர் சீதாராம் தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த குன்றத்தூரில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஐடியா லேப்-ஐ அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் தலைவர் சீதாராம் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து அங்கு பயின்றுவரக்கூடிய மாணவர்கள் மேற்கொள்ளும் கண்டுபிடிப்புகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீதாராம் தாய் மொழியில்  படிப்பதன் மூலமே மாணவர்களின் சிந்தனை திறன் மேம்பட்டு புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஏதுவாக இருக்கும் என்று குறிப்பிட்டார். எனவே பொறியியல் படிப்புகளை தமிழ் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் புறநகர் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களில் அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் சார்பில் ஐடியா லேப் நிறுவப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார். பொறியியல் படிப்புகள் தமிழ் உட்பட இதுவரை 13 மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட சீதாராம் மேலும் 22 மொழிகளில் மொழி மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories: