சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீரர்: சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!!

சென்னை: கத்தார்நாட்டில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் முதல் முறையாக வெண்கல பதக்கம் வென்று தாயகம் திரும்பிய தமிழக வீரர் பிரிதிவிராஜ் தொண்டைமானுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கத்தார் நாட்டில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உட்பட 40 நாடுகள் பங்கேற்றன.

இதில் இந்தியா சார்பில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தலா 3 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் ஆடவர் தனி நபர் பிரிவில் இறுதி போட்டிக்கு முன்னேறிய தமிழக வீரர் பிரிதிவிராஜ் தொண்டைமான் வெண்கல பதக்கத்தை தட்டி சென்றார். இந்த நிலையில் பதக்கத்துடன் நாடு திரும்பிய பிரிதிவிராஜூக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

15 ஆண்டுகளாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் பிரிதிவிராஜ் தாம் முதல் முறையாக சர்வதேச போட்டியில் பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே தமது லட்சியம் என்று பிரிதிவிராஜ் தெரிவித்துள்ளார்.  

Related Stories: