சென்னை ஆவின் பால் பண்ணைகளில் விநியோகம் சீரடைந்தது: ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சென்னை அம்பத்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணைகளில் இருந்து சரியான நேரத்தில் பால் விநியோகம் செய்யப்பட்டது. சோழிங்கநல்லூரில் இயங்கும் ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் இரவு திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று அதிகாலையில் உரிய நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பால் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. பால் பண்ணையில் இருந்து 2 மணி நேரம் தாமதமாக வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

இதேபோல அம்பத்தூரில் உள்ள பால் பண்ணையிலும் பால் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்தது. நேற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் பணிக்கு வராததால் ஆவின் நிர்வாகம் தரப்பில் உரிய நேரத்தில் பால் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனவே இன்று பால் பண்ணைகளில் விநியோகம் சீரடைந்தது. அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து 4 லட்சம் லிட்டர் அளவிலான பால் அண்ணாநகர், கொரட்டூர், முகப்பேர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளுக்கு உரிய நேரத்தில் சென்றதாக அம்பத்தூர் ஆவின் துணை மேலாளர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: