போத்தீஸ் ஸ்வர்ணமஹால் சார்பில் சாதனை பெண்களுக்கு தங்க மங்கை விருது

சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சென்னை குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் ஸ்வர்ண மஹாலில் தங்க மங்கை சிறப்பு விருது (கோல்டன் உமன் எக்ஸலன்ஸ் அவார்டு) வழங்கும் விழா நடந்தது. இதில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனை பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது. போத்தீஸ் உரிமையாளர் ரமேஷ், பட்டிமன்ற பேச்சாளரும், பாடநூல் கல்வியியல் பணிகள் கழக தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் விருதுகளை வழங்கினர்.

விழாவில் கலை மற்றும் கலாசார பிரிவில் கின்னஸ் சாதனை படைத்த டாக்டர் கவிதா சீனிவாசன், சமூக சேவையாளர் பிரிவில் மனிதநேய துறையில் 6 விருதுகளை வென்ற டாக்டர் சுமித்ரா பிரசாத், கல்வியாளர் பிரிவில் எழுத்தாளர் ஹாசினி லட்சுமிநாராயணன், விளையாட்டு துறையில் ‘ஸ்கேட்போர்டிங் பார்க்’ போட்டியில் தேசிய அளவில் 2ம் இடம் பிடித்த கமலி, சக்கர நாற்காலி பிரிவில் தேசிய விருது பெற்ற கூடைப் பந்து வீராங்கனை கனகலட்சுமி, தொழில் முனைவோர் பிரிவில் நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வீணா குமரவேல் ஆகியோருக்கு, தங்க மங்கை விருது வழங்கப்பட்டது.

Related Stories: