சென்னை: இந்திரா காந்தி தேசிய பழங்குடியின பல்கலைக்கழகத்தில், கேரள மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இந்திரா காந்தி தேசிய பழங்குடியினப் பல்கலைக்கழகத்தில் கேரள மாணவர்கள் மீது அவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புடைய பாதுகாப்புப் பணியாளர்களே தாக்குதல் நடத்தியுள்ள வன்செயலுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
