சென்னை: ஹஜ் பயணிகள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி வருகிற 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய ஹஜ் குழுவானது, புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியினை 20.03.2023 வரை நீட்டித்துள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக அல்லது மும்பை இந்திய ஹஜ் குழுவின் “Hcol” செயலியினை கைபேசியில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.