உலக போரில் பங்கேற்ற இந்திய வீரர்களுக்கு நினைவஞ்சலி

லண்டன்: லண்டனில் நடந்த காமன்வெல்த் தின விழாவில் உலக போரில் பங்கேற்று உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. லண்டனில் ஆண்டுதோறும் காமன்வெல்த் தின நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள். நேற்று நடைபெற்ற விழாவில் முதல் மற்றும் இரண்டாவது உலக போர்களில் பங்கேற்று உயிர் நீத்த காமன்வெல்த் நாடுகளின் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் தலைமையில் நடந்த விழாவில் இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, இந்திய ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தியா, ஆப்ரிக்கா மற்றும் கரீபிய நாடுகளை சேர்ந்த 50 லட்சம் ராணுவ வீரர்கள் உலக போரில் பங்கேற்றனர். இதில் வீர மரணம் அடைந்தவர்களின் நினைவாக லண்டனில் கட்டப்பட்ட நினைவிடத்தை கடந்த 2002ம் ஆண்டு மறைந்த ராணி எலிசபெத் திறந்து வைத்தார். இதில் ஒவ்வொரு ஆண்டும் உலக போரில் உயிர் நீத்தவர்களுக்கு ஆண்டுதோறும் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

Related Stories: