நாகை மாவட்டத்தில் கச்சா எண்ணெய் கசிவால் சுற்றுச்சூழல் பாதிப்பு: பாரத மக்கள் கட்சித் தலைவர் பிரபாகரன் அறிக்கை

சென்னை: பாரத மக்கள் கட்சி தலைவர் பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருகே பட்டினச்சேரி கடற்கரையில் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுச்சூழல் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக, கடல்சார் உட்பட அனைத்து உயிரினங்களுக்கு பாதிப்புக்குள்ளாகும்  சூழல் நிலவுகிறது. மேலும் அப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் இந்த கச்சா எண்ணெய் கசிவு காரணமாக மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே கசிவு ஏற்பட்ட

நிலையில் சிபிசிஎல் நிறுவனத்தின் மெத்தன போக்கால் மீண்டும் இந்தநிலை ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மட்டுமல்லாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு காசிமேடு எண்ணூர் கடல் பகுதியில் கச்சா எண்ணெய் கசிவால் மீனவர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்தன.

மேலும், அதிமுக ஆட்சியில் பினாமி பெயரில் சென்னையில் கடற்கரை பகுதி வழியாக கச்சா எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டது. இதன் மூலமாக கடல் வளம் பாதிக்கும் என்பதால் மீனவர்கள்  போராடினர். இருப்பினும், அப்போதையை அதிமுக அரசு கடற்கரை பகுதி வழியாக கச்சா எண்ணெய் குழாய் பதிக்கப்பதிக்க இசைவு தெரிவித்தது. இதில் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இதேபோல, தான் தற்போது நாகப்பட்டினத்தில் இது போன்ற பிரச்னை விஸ்வரூபம்  எடுத்துள்ளது. அதன்படி, தற்போதைய தமிழ்நாடு அரசு அவற்றில் உடனடியாக தலையிட்டு, கடல் சுற்று சூழல், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில்  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Related Stories: