மகாராஷ்டிரா முதல்வரின் யாத்திரையின் போது பெண் நிர்வாகிக்கு எம்எல்ஏ முத்தம் கொடுத்தாரா?: வீடியோ வைரலால் பரபரப்பு

மும்பை: சிவசேனா கட்சியின் எம்எல்ஏ பிரகாஷ் சர்வேயும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷீத்தல் மாத்ரேவும் முத்தமிட்டுக் கொண்ட வீடியோவானது இணையங்களில் வைரலாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் ஆசிர்வாத யாத்திரையின்போது சிவசேனா கட்சி எம்எல்ஏ பிரகாஷ் சர்வே மற்றும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷீத்தல் மாத்ரே ஆகியோர் கலந்துகொண்டனர். இதுதொடர்பான வீடியோவில், முதல்வர் ஷிண்டே உள்ளிட்ட அக்கட்சியின் பிரமுகர்கள், வேனில் நின்றபடி இருபுறம் உள்ள மக்களுக்கு கையசைத்துக் கொண்டே செல்கின்றனர். சிவசேனா கட்சி எம்எல்ஏ பிரகாஷ் சர்வே முன்புறம் நிற்க, அவருக்கு பின்புறம் ஷீத்தல் மாத்ரே நிற்கிறார். அப்போது பிரகாஷை ஷீத்தல் மாத்ரே கூப்பிடுகிறார். திரும்பிப் பார்த்த அவரது கன்னத்தில் ஷீத்தல் மாத்ரே முத்தமிடுகிறார். பின்னர், அவர் ஏதோ கையை நீட்டி பேசுகிறார். இவைதான் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து, ஷீத்தல் மாத்ரே, இந்த செயலுக்கு காரணமானவர்களை கடுமையாக சாடியதுடன், தனது நடத்தையை அவமதித்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘அரசியலில் ஒரு பெண்ணை பற்றி சொல்வதற்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்றால், அவளது நடத்தையை இழிவுபடுத்துவதுதான் இந்த வீணான கூட்டத்தின் கலாசாரமா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் அந்த வீடியோ மார்பிங் செய்யப்பட்டது எனவும், பிரகாஷின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இப்படி செய்ததாகவும் பிரகாஷின் குடும்பத்தார் குற்றஞ்சாட்டியுள்ளனர். இவ்விவகாரம் குறித்து தஹிசார் போலீசார் வழக்குபதிந்து சிலரை கைது செய்துள்ளனர்.

Related Stories: