சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுவையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில் மொழித்தாள் தேர்வு மிக எளிமையாக இருந்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர். 2022 - 23ம் கல்வியாண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றில் இருந்து அடுத்த மாதம் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதுவதால் 3225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளான இன்று மொழி பாடங்களுக்கான தேர்வு நடந்தது.
