நிதி பிரச்னையால் தள்ளி போகும் இலங்கை உள்ளாட்சி தேர்தல்

கொழும்பு: இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.   உள்ளாட்சி தேர்தல் நடத்த கோரி  உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டது. பொருளாதார நெருக்கடியால்  மார்ச் 9ம்தேதி  தேர்தலை நடத்துவது கடினம் என்று  தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. தேர்தல் நடத்துவதற்கு போதுமான நிதி ஒதுக்குமாறு அரசு கருவூலத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தல் நடத்த நிதி ஒதுக்குமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. இந்த  தேர்தலை  ஏப்ரல்  25ம் தேதி நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

Related Stories: