தாய்லாந்தில் மூச்சுத்திணறலால் ஒரு வாரத்தில் 2 லட்சம் பேர் அட்மிட்

பாங்காக்: உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தாய்லாந்து நாட்டில் சுமார் 11 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். ஆனால் மஞ்சள் - சாம்பல் நிறத்திலான வாகன புகை, தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை, வேளாண் கழிவுகளால் ஏற்படும் புகை ஆகியவற்றால், முக்கிய நகரங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. காற்று மாசுபாட்டின் விளைவாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் மட்டும் கிட்டத்தட்ட 2,00,000 பேர் மூச்சுத் திணறல் உள்ளிட்ட காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதனால், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும், வெளியே வந்தால் முகக்கவசம் அணிந்து வருமாறும் அமைச்சக அதிகாரியான மருத்துவர் கிரியாங்க்ராய் நாம்தாய்சோங் தெரிவித்துள்ளார்.

Related Stories: