கர்நாடகாவில் பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

கர்நாடகா: பெங்களூரு-மைசூரு இடையே 118 கிலோ மீட்டர் தூரத்துக்கு 10 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.8 ஆயிரத்து 480 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு 75 நிமிடங்களில் இந்த விரைவுச்சாலையில் செல்ல முடியும். இந்த சாலையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதன்படி, பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை உள்பட ரூ.16 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தொடங்கிவைத்தார். இந்த சாலை மூலம் பெங்களூருவில் இருந்து குடகு, ஊட்டி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விரைவாக செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

* ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி

இந்த புதிய சாலையின் மூலம் பெங்களூரில் இருந்து மைசூருவுக்கு 1 மணி நேரத்தில் பயணம் செய்ய முடியும். பெங்களூருவில் 17,000 கோடி ரூபாய் மதிப்பில் ரிங் ரோடு அமைக்கப்படவுள்ளது, இது மைசூருவுக்கு நேரடியாகப் பயணிக்க உதவும். இது அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்க உதவும். இந்த திட்டங்கள் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் உதவும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.  கடந்த சில நாட்களாக, பெங்களூரு-மைசூரு விரைவு சாலையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நமது தேசத்தின் வளர்ச்சியைக் கண்டு இளைஞர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். இந்தத் திட்டங்கள் அனைத்தும் செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கான பாதைகளைத் திறக்கும்.

* பிரதமர் மோடி உரை

பெங்களூரு மற்றும் மைசூரு ஆகியவை கர்நாடகாவின் முக்கியமான நகரங்கள். ஒன்று தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்றது, மற்றொன்று பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றது. இரு நகரங்களையும் தொழில்நுட்பத்தின் மூலம் இணைப்பது மிகவும் முக்கியமானது.  கடந்த ஒன்பது ஆண்டுகளில் 3 கோடிக்கும் அதிகமான ஏழைகளுக்கு வீடுகள் கட்டப்பட்டு அதன் கீழ் கர்நாடகாவில் லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கர்நாடகாவில் 40 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் நீர் வழங்கப்பட்டுள்ளது. 2022ல், இந்தியா ஒரு சாதனை முதலீட்டைப் பெற்றது. கர்நாடகாதான் அதிகம் பயனடைந்தது. மோடியின் புதைகுழி தோண்டுவோம் என்று காங்கிரஸ் கனவு காண்கிறது. பெங்களூரு - மைசூரு விரைவுச் சாலையை அமைப்பதிலும், ஏழைகளின் வாழ்க்கையை எளிதாக்குவதிலும் மோடி மும்முரமாக இருக்கும்போது, ​​மோடியின் கல்லறை தோண்டுவதில் காங்கிரஸ் மும்முரமாக உள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார்.

Related Stories: