சுரங்கப்பாதை, மெட்ரோ ரயில் பணி மேடவாக்கம் பிரதான சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்: ஈ.வெ.ரா சாலையில் மழைநீர் வடிகால்வாய் பணி

சென்னை: சென்னையில் போக்குவரத்து காவல், போக்குவரத்து தெற்கு மாவட்ட காவல் துறை சார்பில் மடிப்பாக்கம் போக்குவரத்து உட்கோட்டத்தில் மவுண்ட் போக்குவரத்து காவல் நிலைய எல்லை மேடவாக்கம் பிரதான சாலை மற்றும் எம்ஆர்டிஎஸ் சாலை சந்திப்பு  உள்செல்லும் சாலை மற்றும் வெளிசெல்லும் சாலையிலும் நெடுஞ்சாலை துறை வாகன சுரங்கப்பாதை ஏற்படுத்துதல் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் தூண் அமைக்கும் பணி நடைபெற உள்ளன.  இதையடுத்து, வாகன போக்குவரத்து மாற்றுப் பாதையில் செல்லும்படி சோதனை அடிப்படையில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல்  வரும் 18ம் தேதி வரை சோதனை ஓட்ட அடிப்படையில் வாகனம் திருப்பி விடப்பட்டது. அதன்படி வாகனங்கள் எவ்வித இடையூறும் இன்றி இயங்கி வருகின்றன. மேலும் மாற்றுப் பாதையில் இயக்க எம்டிசி அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர்.  எனவே பின்வரும் மாற்றுப் பாதையில்  வாகனங்களை நிரந்தரமாக  நாளை முதல் இயக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் சாலையில் இருந்து வரும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் இடதுபுறம் திரும்பி மேடவாக்கம் பிரதான  எம்ஆர்டிஎஸ் சாலைக்கு செல்ல தடைவிதிக்கப்படுகிறது. இந்த வாகனங்கள் எம்ஆர்டிஎஸ் சாலை சந்திப்பு 100 மீட்டர் முன்னதாக இடதுபுறம் உள்ள சிதம்பரனார் தெருவில் திரும்பி சென்று  வலதுபுறம் திரும்பி புது தெற்கு  தெரு சாலை வழியாக சென்று மேடவாக்கம் பிரதான சாலை சென்று அடையலாம்.

வேளச்சேரி  எம்ஆர்டிஎஸ் சாலை சந்திப்பில் இருந்து மேடவாக்கம் பிரதான சாலை வழியாக நங்கநல்லூர் செல்லும் மாநகர பேருந்துகள் மற்றும் அனைத்து வணிக வாகனங்கள் நேராக சென்று தில்லை கங்காநகர் சுரங்கப்பாதைக்கு முன் இடதுபுறம் 4வது பிரதான சாலையில் திரும்பி மீண்டும் வலதுபுறம் திரும்பி 22வது தெரு வழியாக சென்று இடதுபுறம் திரும்பி நங்கநல்லூர் 2வது பிரதான சாலை வழியாக நங்கநல்லூர் செல்லலாம். கீழ்க்கட்டளையிலிருந்து மேடவாக்கம் பிரதான சாலை வழியாக ஆதம்பாக்கம் உள்செல்லும் அனைத்து  வாகனங்கள் நேராக எம்ஆர்டிஎஸ் சாலை  சந்திப்பு  செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் மேடவாக்கம் பிரதான சாலை X பெருமாள்நகர் 2வது பிரதான சாலைக்கு இடதுபுறம் திரும்பி நேராக சென்று வேல்டாஸ் காலனி 50 அடி சாலை வலதுபுறம் திரும்ப வேண்டும். மீண்டும் அய்யப்பா நகர் சாலை வழியாக சென்று வலதுபுறம் திரும்பி, 100 அடி சாலை வழியாக சென்று இடதுபுறம் திரும்பி லட்சுமி நகர் முதல் பிரதான சாலை- இடதுபுறம் திரும்ப வேண்டும்.  நங்கநல்லூர் 6வது  பிரதான சாலை வலது புறம் திரும்பி, நங்கநல்லூர் 4வது பிரதான சாலை  வலதுபுறம் திரும்பி, முதல் பிரதான சாலை இடதுபுறம் திரும்பி சென்று, நங்கநல்லூர் 2வது பிரதான சாலையில் வலது புறம் திரும்பி தில்லை கங்காநகர் 23வது தெரு வழியாக எம்ஆர்டிஎஸ் 100 அடி சாலை சந்திப்பு சென்று அடையலாம். மேலும் பொதுமக்கள் தங்கள் ஆலோசனை மற்றும் புகார்களை * & T *imited:- krish*aprabhakar@**tecc.com இணையதள முகவரியில் தெரிவிக்கலாம்.

போக்குவரத்து போலீசார் வெளியிட்ட மற்றொரு அறிக்கை: ஈ.வெ.ரா சாலையில் சென்ட்ரலிருந்து கோயம்பேடு சந்திப்பு நோக்கி செல்லும் திசையில் ஈ.வெ.ரா சாலையில் சுதா ஓட்டல் முன்பு நெடுஞ்சாலை துறையினர் நேற்று (சனிக்கிழமை) இரவு 10 மணி முதல் பள்ளம் தோண்டி சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால்வாய் கட்டுமான பணியில் ஈடுபட உள்ளதால், போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே நேற்று இரவு 10 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. ஈ.வெ.ரா சாலையில் நாயர் மேம்பாலம் சந்திப்பிலிருந்து தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கி நேராக செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் ஈ.வெ.ரா சாலையில் நாயர் மேம்பாலம் சந்திப்பிலிருந்து வலதுபுறம் திரும்பி தாசபிரகாஷ் சந்திப்பிற்கு செல்லலாம். ஈ.வெ.ரா சாலையில் தாசபிரகாஷ் சந்திப்பிலிருந்து நாயர் மேம்பாலம் சந்திப்பு நோக்கி நேராக செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் ஈ.வெ.ரா சாலையில் தாசபிரகாஷ் பாயின்ட் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, ராஜா அண்ணாமலை சாலை வழியாக சென்று அழகப்பா சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி அழகப்பா சாலை மறுபடியும் வலதுபுறம் திரும்பி நாயர் மேம்பாலம் சந்திப்பு மற்றும் ஈ.வெ.ரா சாலை வழியாக செல்லலாம். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

* போக்குவரத்து மாற்றம் சோதனை அடிப்படையில் கடந்த பிப்ரவரி 1 முதல்  வரும் 18ம் தேதி வரை சோதனை அடிப்படையில் திருப்பி விடப்பட்டது.

Related Stories: