பல்லாவரம் தொகுதியில் 35 இடங்களில் குடிநீர் நிலையங்கள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

தாம்பரம்: பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் 35 இடங்களில் கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் மற்றும் சிறு மின்விசை நீர்த்தேக்க தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ இ.கருணாநிதி தொடங்கி வைத்தார். பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னைகளை தீர்க்க குடிநீர் நிலையங்கள் மற்றும் சிறு மின்விசை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற, பல்லாவரம் எம்எல்ஏ தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.53 கோடியே 53 லட்சத்து 20 ஆயிரம் ஒதுக்கீடு செய்தார்.

இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சி 9வது வார்டு பாலகிருஷ்ணன் தெரு, சத்யா நகர், வினாயகர் கோயில் தெரு, அசன் பாஷா குறுக்கு தெரு, 13வது வார்டு அருந்ததிபுரம் 2வது தெரு, காமராஜ் நகர், முனுசாமி தெரு, குளக்கரை தெரு, நாகரத்தினம் தெரு, 14வது வார்டு சுப்பிரமணி கோயில் தெரு, 16வது வார்டு மலைமகள் தெரு, பச்சையம்மன் கோயில் தெரு, குவாரி மேட்டு தெரு, 17வது வார்டு ராஜிவ் காந்தி நகர், மலையோர தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, காந்தி நகர், ஜெயலட்சுமி நகர், 20வது வார்டு கஸ்தூரிபா தெரு, சிவராஜ் தெரு, காமாட்சி நகர், 21வது வார்டு கட்டபொம்மன் நகர், வசந்தம் நகர், இளங்கோ நகர், 22வது வார்டு ராம் நகர், 25வது வார்டு சிதம்பரம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சிறு மின்விசை நீர்த்தேக்க தொட்டிகள், 14வது வார்டு சாலன் தெரு, 15வது வார்டு வேல்முருகன் காலனி, 17வது வார்டு பிள்ளையார் கோயில் தெரு, 22வது வார்டு பாத்திமா நகர், 28வது வார்டு ஆகிய பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக்கப்பட்டது.  இவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி நேற்று ெதாடங்கி வைத்தார். இதன் மூலம் நீண்ட நாள் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: