சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேயர் ஆர்.பிரியா

சென்னை: சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை மேயர் ஆர்.பிரியா இன்று அதிகாலை  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை மாநகராட்சியில்,  நகர்ப்புர உட்கட்டமைப்பு நிதி , சேமிப்பு நிதி மற்றும்  சிங்கார சென்னை 2.O ஆகிய திட்டங்களின் கீழ் ரூபாய் 172.70 கோடி ரூபாய் செலவில் 226 கிலோமீட்டர் நீளத்தில் பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச்சாலைகள் அமைக்கும் பணிகள் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறின்றி இரவில்  நடைபெற்று வருகின்றன.

மேயர் ஆர். பிரியாவின் அறிவுரையின்படி இப்பணிகளை கண்காணிக்க முதன்மைச் செயலாளர்/ ஆணையாளர் தலைமையில், அலுவலர்கள், பொறியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு அக்குழுவினர் கண்காணிப்பில் இந்த சாலைப் பணிகள் அனைத்தும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மேயர் .ஆர்.பிரியா இன்று (11.03.2023) அதிகாலை 1.30 மணி அளவில் தேனாம்பேட்டை மண்டலம், வார்டு - 110க்குட்பட்ட வள்ளுவர் கோட்டம் பிரதான சாலையில் புதிதாக சாலை அமைக்க பழைய சாலையினை அகழ்ந்தெடுக்கும் பணிகளையும், அண்ணா நகர் மண்டலம் வார்டு 101க்குட்பட்ட  அண்ணா நகர் முதல் பிரதான சாலையில் சிங்கார சென்னை 2.O  திட்டத்தின் கீழ் புதிதாக சாலை அமைக்கும் பணியினையும்  திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார.புதிதாக அமைக்கப்படும் சாலைகளைத் தரமாகவும், விரைவாகவும் முடித்திட அலுவலர்களுக்கு மாண்புமிகு மேயர் உத்தரவிட்டார்,

இந்த ஆய்வுகளின்போது, நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, மாமன்ற உறுப்பினர் மெட்டில்டா கோவிந்தராஜ், தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட  அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: