பேஸ்புக்கின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ ஊழியர்கள் மேலும் பணிநீக்கம்

சான் பிரான்சிஸ்கோ: பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா மீண்டும் தனது ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கும் வகையிலும், வருமானம் குறைந்து வருவதைக் காரணம் காட்டியும், ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவில் வெளிவரும் புகழ்பெற்ற நாளேடான தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட செய்தியில், ‘பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, அடுத்த சில மாதங்களில் படிப்படியாக ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டை விட 13 சதவீதம் அளவிற்கு கூடுதலாக ஆட்குறைப்பு இருக்கும்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு 11,000 ஊழியர்களை மெட்டா நிறுவனம் வெளியேற்றியது. தொடர்ந்து இரண்டாவது சுற்றாக ஆட்குறைப்பு வேலையை தொடங்கியுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும். இன்ஜினியரிங் படிப்பு அல்லாத பணியாளர்கள் அதிகமாக வெளியேற்றப்படுவார்கள்’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories: