ஆலந்தூர் 163, 165வது வார்டு திமுக சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

ஆலந்தூர்: ஆலந்தூர் 163, 165வது வார்டு திமுக சார்பில், ஆதம்பாக்கம், அம்பேத்கர் திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை  நடந்தது. 165வது வார்டு வட்ட செயலாளர் கே.ஆர்.ஜெகதீஸ்வரன் தலைமை தாங்கினார். ஆலந்தூர் பகுதி செயலாளர்கள் என்.சந்திரன், பி.குணாளன், 163வது வார்டு கவுன்சிலர் பூங்கொடி ஜெகதீஸ்வரன் முன்னிலை வகித்தனர். 163வது வட்ட செயலாளர் அ.வேலவன் வரவேற்றார்.

கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர் திண்டுக்கல் லியோனி ஆகியோர், 1000க்கும் மேற்பட்டோருக்கு பிளாஸ்டிக் பக்கெட் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினர். இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘முதல்வர் 70 ஆண்டுகளில், 55 ஆண்டுகளில் நம்மோடு இருந்து வருகிறார். இது நம்ம வரலாறு.

எடப்பாடியை எப்படி தெரியும்? சசிகலாவின் முன் ஊர்ந்து சென்றதால் மட்டுமே தெரிந்தவர். நம் முதல்வர் ஆட்சியில், இன்று 40 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் இலவச பயணம் செல்கின்றனர். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகள்,  6ம் வகுப்பு முதல் உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு ரூ.1000, காலை சிற்றண்டி, புதிய தொழில்கள் முலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என பல்வேறு திட்டங்களையும் 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார்.

ஒன்றிய பாஜ ஆட்சியில் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் தருவதாக சொன்னார்கள், தந்தார்களா? அதற்கு பதில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு என மக்களை பாதிக்கும் பொல்லாத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு அதிமுக துணைபோகிறது’ என்றார்.

இதில் ஒன்றிய செயலாளர் வந்தேமாதரம், பொதுக்குழு உறுப்பினர்கள் எம்எஸ்கே.இப்ராஹிம், ஆர்.டி.பூபாலன், இரா.பாஸ்கரன், கீதா ஆனந்தன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டன், வட்ட செயலாளர்கள் இ.உலகநாதன், சாலமோன், கே.பி.முரளிகிருஷ்ணன், எம்.ஆர்.சீனிவாசன், ஜெ..யேசுதாஸ், ஜெ.நடராஜன், டி.ரவி, கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார், ஜி.ரமேஷ், கோ.பிரபாகரன், பெருமாள், ஆர்.பாபு, கே.ஆர்.ஆனந்தன், கிறிஸ்டோபர், பந்தல் கந்தன், அபுதாகீர், கலாநிதி குணாளன், பூவராகவன், கே.விஜய்பாபு, வழக்கறிஞர் வேல்முருகன், டிஆர்எம்.மணிகண்டன், கேபிள் ராஜா, கே.கே.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: