ஆட்சிக்காக திமுகவை அண்ணா தொடங்கவில்லை, தமிழனத்துக்காக தொடங்கியது தான் திமுக இயக்கம்: முதல்வர் ஸ்டாலின் உரை

கோவை: ஓராண்டு காலத்தில் சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய அளவுக்கு தீர்மானங்களைக் அண்ணா கொண்டு வந்தார். இருமொழி கொள்கை, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது உட்பட முக்கிய 3 தீர்மானங்களை அண்ணா நிறைவேற்றினார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் முன்னிலையில் 10,000 பேர் திமுகவில் இணைகின்றனர். மாற்று காட்சிகளில் இருந்து விலகி திமுகவில் சேருகின்றனர். ஆட்சிக்காக திமுகவை அண்ணா தொடங்கவில்லை, தமிழனத்துக்காக தான் தொடங்கியது  திமுக இயக்கம். முதலமைச்சர் பதவிக்காக இன்று கட்சியை தொடங்கிய பல காட்சிகள் காணாமல் போய்விட்டது. 1949-ல் தொடங்கப்பட்ட திமுக 1957-ல் தான் தேர்தலில் களம் கண்டது. 1975-ல் 15 பேர் திமுக சார்பில் சட்டப்பேரவைக்கு தேர்தெடுக்கப்பட்டனர்.

1967-ம் ஆண்டு அண்ணா தலைமையில் வெற்றிபெற்று தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை பிடித்தது. தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அண்ணா கொண்டு வந்தார். அண்ணாவுக்கு பிறகு தமிழ்நாட்டில் முதல்வரான கலைஞர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். ஆட்சியல்ல எனது உயிரே போனாலும் கவலையில்லை என்று கூறி நெருக்கடி நிலைய எதிர்த்தவர் கலைஞர் என்று கூறியுள்ளார்.

நெருக்கடி நிலையை ஆதரிக்குமாறு மத்தியில் இருந்து வந்த கோரிக்கையை கலைஞர் நிராகரித்தார். நெருக்கடி நிலையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியவுடன் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாமல் படுபடக்கூடிய கட்சி திமுக என்று முதலவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு இன்று முதலே இருந்து உழைக்க வேண்டும். திமுக ஆட்சி மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை காரணமாகவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: