ரத்தசோகை இல்லாத மாவட்டமே மிஷன்-11 திட்டத்தின் நோக்கம்: காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆர்த்தி தலைமை வகித்தார். பின்னர், மிஷன்-11 என்ற திட்ட லோகாவை வெளியிட்டார்.

அப்போது கலெக்டர் கூறுகையில், “மிஷன்-11 என்ற திட்டத்தின் மூலம் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள்,  19 முதல் 30 வயதுடைய ஆண் மற்றும் பெண்களின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையாமல் பார்த்துகொள்வது, ரத்த சோகை இல்லாத காஞ்சிபுரம் மாவட்டத்தை உருவாக்குவது, அனமியா மகத் பாரத் திட்டத்தின் மூலம் இரும்புச்சத்து டானிக், இரும்புச்சத்து மாத்திரை உட்கொள்ளும் 6 மாதம் முதல் 60 மாத குழந்தைகள், 5 முதல் 19 வயது வரையுள்ள ஆண், பெண் மற்றும் 20 முதல் 30 வயது வரையுள்ளவர்களை கண்காணிப்பது, ரத்தசோகை வராமல் தடுப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ரத்த சோகையுள்ள கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து ரத்தசோகை இல்லாத காஞ்சிபுரம் மாவட்டத்தை உருவாக்குவதே மிஷின்-11 திட்டத்தின் நோக்கமாகும்” என்றார்.

நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பிரியராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: