சட்டவிரோத மின்வேலிகள் அமைக்கப்படுவதை தடுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: சட்டவிரோத மின்வேலிகள் அமைக்கப்படுவதை தடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் மாரண்டஅள்ளி அருகே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 5 காட்டு யானைகள் சுற்றித் திரிந்தன. அவற்றை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டு இருந்தது. இந்த நிலையில், காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் வனவிளங்குகள் நுழையாமல் தடுப்பதற்காக  விவசாயி முருகேசன் என்பவர் மின்வேலி அமைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலையில் அந்த வழியாக சுற்றிக்கொண்டிருந்த 3 காட்டுயானைகள் தவறுலாக மின்வேலியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது இதனால் விவசாயி முருகேசன் கைது செய்யபட்டார். இந்நிலையில், நெல்லையை சேர்ந்த வின்சென்ட் என்பவர் வன விலங்குகளால் மனிதர்கள் தாக்கப்படுவதை தடுக்க சூரிய மின்சக்தியால் இயங்கக் கூடிய மின்வேலிகள் அமைக்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையில் சட்டவிரோத மின்வேலிகள் அமைக்கப்படுவதை தடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு குறித்து சுற்றுசூழல், வனத்துறை செயலாளர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஏப்ரல் 10-ம் தேதிக்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது.

Related Stories: