ராகுல் காந்தி நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தானவர் என அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சனம்... 'நீங்கள் அவமானகரமானவர் என காங்கிரஸ் பதிலடி!!

டெல்லி : ராகுல் காந்தியை நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தானவர் என விமர்சித்துள்ள சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவை அவமானகரமானவர் என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடி உள்ளது. அண்மையில் லண்டன் சென்றுள்ள ராகுல் காந்தி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் பற்றிய உரை குறித்து பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.பிரதமர் மோடி மற்ற மதத்தினரை 2ம் தர குடிமக்களாக நடத்துகிறார் என்று குற்றம் சாட்டி இருந்த ராகுல் காந்தியின் வீடியோவை சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததோடு, நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தானவர் ராகுல் காந்தி என்று குறிப்பிட்டு இருந்தார்.

ராகுல் காந்தி பப்பு என்று வெளிநாட்டவர்களுக்கு தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்,  ரிஜிஜூ அவமானகரமானவர்  என்று கட்டமாக விமர்சித்து உள்ளார். உங்களுடையது 2 ரூபாய் மதிப்புள்ள கிண்டல் பதிவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உங்கள் இருப்புக்கே கடன் பட்டுள்ளீர்கள் என ரிஜிஜூவை காங்கிரஸ் நிர்வாகி சுப்ரியா விமர்சித்துள்ளார். மேலும் மோடியின் அமைச்சரவையில் ஒரே ஒரு கிறிஸ்துவரையோ, இஸ்லாமியரையோ காட்ட முடியுமா என்று ரிஜிஜூவுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: