சூதாட்ட தடை சட்டத்தை தடுப்பது மூலம் பெரிய சூதாட்டத்தில் ஆளுநர் ஈடுபட்டுள்ளார்: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு விமர்சனம்

சென்னை: சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கூறியதாவது:  ஆளுநர் தரப்பில் இது முதல் நடவடிக்கையாக இருந்தால் எதோ தவறு நடந்தாக கூறலாம், ஆளுநரின் தொடர்ச்சியான இது போன்ற அணுகுமுறை தவறானது. நீட் மசோதா 2வது முறையாக திருப்பி அனுப்பட்டு, தற்போது குடியரசு தலைவரிடம் உள்ளது. சட்ட காரணங்களுக்காக திருப்பி அனுப்பலாம் மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காகவே திருப்பி அனுப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை வழங்குவதற்கு 4 மாதங்கள் எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை ஒரு இரு வாரத்தில் செய்திருக்கலாம். இது போன்ற முக்கியமான சட்டங்களை திருப்பி அனுப்புவது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்கப்பதாகவே தெரிகிறது. மசோதா அனுப்பிய அதே பிரதி முன்னதாக அவசர சட்டமாக அனுப்பட்ட போது அதற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர். அதே  சரத்துகள் உடைய மசோதாவுக்கு ஏன் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. வேண்டுமென்றே ஆளுநர் தாமதப்படுத்துகிறார்.

ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஆளுநர்களை வைத்து பாஜக அல்லாத மாநில அரசுகளை சீர்குலைக்க வேண்டும் என்பதே அவர்களின் ஒரே குறிக்கோள். ஆளுநர் மாளிகைகள் பாஜ கிளை அலுவலகமாக செயல்பட்டு மாநில அரசுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. சட்டப்பேரவை மீண்டும் சட்டம் இயற்றி அனுப்பினால் அதை சட்டமாக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. மீண்டும் ஆளுநர் தாமதித்தால் ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே எழும் தமிழ்நாடு அரசு அதை முன்னெடுத்து செல்ல வேண்டும். மாநில ஆளுநர் பதவி தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: